அதிர்ச்சி - கார் ரேஸ் பயிற்சியில் விபத்தில் சிக்கிய அஜித்!


சென்னை: கார் ரேஸ் பயிற்சியின் போது நடிகர் அஜித் விபத்தில் சிக்கியுள்ளார்.

நடிகர் அஜித் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்போது துபாயில் கார் ரேஸ் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அப்போது, எதிர்பாராத விதமாக அவரது கார் விபத்தில் சிக்கியது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் கார் சேதமடைந்தாலும், நடிகர் அஜித் காயங்கள் ஏதுமின்றி தப்பினார். இந்த விஷயம் அஜித் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சமீபத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக நடிகர் அஜித் குடும்பத்துடன் சிங்கப்பூர் சென்றார். பின்பு, குடும்பத்தை இந்தியா அனுப்பி வைத்துவிட்டு சிங்கப்பூரில் இருந்து துபாய்க்கு கார் ரேஸிங் பயிற்சிக்காக சென்றார். அங்கு அவர் தனது டீமுடன் சைக்கிள் ஓட்டும் காட்சிகள் இணையத்தில் வைரலானது. இந்த நிலையில், பயிற்சியின் போது அஜித் கார் விபத்துக்குள்ளாகி உள்ளது.

x