சென்னை: ‘GOAT' படத்தால் மன அழுத்தத்திற்கு ஆளேனேன் என நடிகை மீனாட்சி செளத்ரி சொல்லி இருக்கிறார்.
வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய், அப்பா- மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருந்த படம் ’GOAT'. கலவையான விமர்சனங்களைப் படம் பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக ஹிட் ஆனது. இந்தப் படத்தில் மகன் விஜய்க்கு ஜோடியாக நடிகை மீனாட்சி செளத்ரி நடித்திருந்தார். இந்தப் படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு வந்த கேலி, கிண்டலால் மன உளைச்சலுக்கு ஆளானதாக அவர் சமீபத்திய பேட்டியில் சொல்லி இருக்கிறார்.
அவர் சொல்லியிருப்பதாவது, “’GOAT' படத்தில் எனக்கான காட்சிகள் குறைவு. ஒரு பாடலுக்கு மட்டுமே நடனம் ஆடியிருப்பேன். ஆனால், என் கதாபாத்திரம் கதைக்கு தேவை இல்லை என்பதைப் போல பலரும் கிண்டல் செய்தார்கள். இது என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. அதேநேரம், ‘லக்கி பாஸ்கர்’ படத்தில் 6 வயது குழந்தைக்கு அம்மாவாக நடித்திருந்தாலும் என்னுடைய கதாபாத்திரம் பாராட்டுகளைப் பெற்றது. இதில் இருந்து என் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லாத கதைகளில் நடிக்கக் கூடாது என புரிந்து கொண்டேன்” என்றார்.