’புஷ்பா2’ படம் பார்க்க வந்து கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட சிறுவனை நடிகர் அல்லு அர்ஜூன் நேரில் சந்தித்துள்ளார்.
கடந்த மாதம் ‘புஷ்பா2’ படத்தின் சிறப்பு காட்சி ஹைதராபாத்தில் ஒளிபரப்பானது. அங்கு அல்லு அர்ஜூன் நேரில் படம் பார்க்க வந்தார். அவர் வந்திருக்கிறார் எனத் தெரிந்து ரசிகர்கள் கூட்டம் கூடினர். காவல்துறையின் அனுமதி மறுத்த நிலையிலும் அல்லு அர்ஜூன் வந்தது சர்ச்சையானது. இதுமட்டுமல்லாது ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். அவரது எட்டு வயது மகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் பரபரப்பான நிலையில், அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். இப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த சிறுவனை பல கெடுபிடிகளுடன் அல்லு அர்ஜூன் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.