'கேம் சேஞ்சர்’ பட விழாவிற்கு வந்த ரசிகர்கள் 2 பேர் உயிரிழப்பு!


’கேம் சேஞ்சர்’ பட விழாவிற்கு வந்த ரசிகர்கள் இருவர் உயிரிழந்திருக்கின்றனர்.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ராம்சரண் நடிப்பில் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. படத்திற்கான புரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் படவிழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆந்திர துணை முதல்வரும் நடிகருமான பவண் கல்யாண் கலந்து கொண்டார்.

விழா முடிந்து வீடு திரும்பிய ரசிகர்கள் இருவர் எதிர்பாராத விதமாக வடிசலேறு எனும் இடத்தில் வேன் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்த நடிகர் ராம்சரண் இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். இவர் மட்டுமல்லாது, தயாரிப்பாளர் தில் ராஜூ மற்றும் பவன் கல்யாணும் இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர்.

x