என்னைத் தாக்க சில க்ரூப் இருக்கிறது என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்திருக்கிறார்.
’அமரன்’ படத்திற்குப் பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் மற்றும் சுதா கொங்கரா இயக்கத்தில் தனது அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் சினிமாவில் தன் வளர்ச்சியைத் தாக்கவும் தடுக்கவும் சில க்ரூப் இருப்பதாக அந்தப் பேட்டியில் கூறியிருக்கிறார்.
“சினிமாவில் என்னை நேசிப்பவர்கள் போலவே, என்னை வெறுப்பவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். நான் சினிமாவில் அப்படி என்ன செய்து விட்டேன் என கேட்பார்கள். அவர்களுக்கு என்னுடைய வெற்றி பதிலடி கிடையாது. என்னை நேசிப்பவர்களுக்கு தான் என்னுடைய வெற்றியை சமர்ப்பிப்பேன்.
சமூக வலைதளங்களில் என்னுடைய படங்கள் தோல்வி அடைந்தால் என்னை கடுமையாகத் தாக்க சில க்ரூப் இருக்கிறார்கள். அதே போல, என்னுடைய படங்கள் வெற்றி பெற்றால் படத்தில் என்னைத் தவிர மற்றவர்களை பாராட்டி பேசுவார்கள். இதை எல்லாம் கடந்து தான் வர வேண்டியிருக்கிறது” என பேசியிருக்கிறார்.