அரசியல் கேள்விகள் வேண்டாம்: நடிகர் ரஜினிகாந்த் காட்டம்!


அரசியல் தொடர்பான கேள்விகள் தன்னிடம் கேட்க வேண்டாம் என நடிகர் ரஜினிகாந்த் நிருபர்களிடம் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து ’கூலி’ படம் படப்பிடிப்பிற்காக தாய்லாந்து சென்ற நிலையில் சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் ’கூலி’ திரைப்படத்தில் 70 சதவிகிதம் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ளது. 13 ஆம் தேதியிலிருந்து 25ஆம் தேதி வரை படப்பிடிப்பு நடைபெற உள்ளது என்றார்.

சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவருக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை தொடர்பாக நிருபர் ஒருவர் ரஜினியிடம் கேள்வி கேட்க முயல, “அரசியல் கேள்வி கேட்க வேண்டாம் என்று பலமுறை உங்களிடம் தெரிவித்து விட்டேன்” என்று காட்டமாக சொன்னார்.

விமான நிலையத்தில் இருந்த ரசிகர்கள் சிலர் ‘தலைவா, தலைவா!’ என உரக்க கத்த ரசிகர்களை கத்த வேண்டாம் என்று தெரிவித்தார் ரஜினிகாந்த்

x