இசையமைப்பாளர் கங்கை அமரனுக்கு திடீர் உடல்நலக் குறைவு!


இசையமைப்பாளர் கங்கை அமரனுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்கிறது.

இசையமைப்பாளர், இயக்குநர், நடிகர் எனப் பன்முகம் கொண்டவர் கங்கை அமரன். 77 வயதாகும் கங்கை அமரன் புதிய படம் ஒன்றில் நடித்து கொண்டிருக்கிறார். இதன் படப்பிடிப்பு மானாமதுரை மற்றும் சிவகங்கை சுற்றிய இடங்களில் நடந்து வருகிறது. இதில் கலந்து கொண்டபோது கங்கை அமரனுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்கிறது.

உடனே, மானாமதுரையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக மாற்றப்பட்டிருக்கிறார். விஷயம் அறிந்ததும் அவரது மகன்களான வெங்கட்பிரபு மற்றும் பிரேம்ஜி இருவரும் மருத்துவமனைக்கு விரைந்திருக்கின்றனர். பனிக்காலம் என்பதால் கங்கை அமரனுக்கு லேசான மூச்சுத்திணறல் ஏற்பட்டிருப்பதாகவும் மற்றபடி அவர் நலமுடன் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

x