என் அப்பாவின் ஆசை நிறைவேறியது - நடிகர் அதர்வா எமோஷனல்!


சென்னை: தன் அப்பாவின் ஆசை நிறைவேறியிருப்பதாக நடிகர் அதர்வா முரளி பேசியிருக்கிறார்.

மறைந்த நடிகர் முரளியின் இரண்டாவது மகனான ஆகாஷ் முரளி, இயக்குநர் விஷ்ணு வர்தன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘நேசிப்பாயா’ படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்தப் படம் வருகிற 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது.

இதில் நடிகர் அதர்வா முரளி கலந்து கொண்டார். அவர் பேசியிருப்பதாவது, ““’நேசிப்பாயா’ படம் எங்களுக்கு நெருக்கமான படம். ஆகாஷின் அறிமுகப் படம் இது. இதற்காக பிரிட்டோ சார் மற்றும் சிநேகாவுக்கு நன்றி. கதைக்கு மகிழ்ச்சியுடன் செலவு செய்வார் பிரிட்டோ சார். விஷ்ணு வர்தனின் ஹீரோ ஆகாஷ் என்பது எங்களுக்கு பெருமையான விஷயம். அதிதி சிறப்பாக நடித்திருக்கிறார். என் முதல் படத்தில் நடந்த லக் என் தம்பிக்கும் அவரின் முதல் படத்தில் நடந்திருக்கிறது. ஆமாம்! ஆகாஷின் முதல் படத்திற்கும் யுவன் தான் இசை. நிச்சயம் படம் வெற்றி பெறும். விழாவிற்கு வருகை தந்திருக்கும் சிவகார்த்திகேயன் பிரதருக்கும் சரத் சாருக்கும் நன்றி. ஜனவரி 14 அன்று படம் வெளியாவது மகிழ்ச்சி. மகன்களின் கனவை தன் கனவாக நினைக்கும் அம்மாக்களில் எங்கள் அம்மாவும் ஒருவர். அவரது வாழ்த்து நிச்சயம் ஆகாஷூக்கு உண்டு. படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்!” என்றார்

x