கோவாவில் திருமணம் முடித்த நடிகை சாக்‌ஷி அகர்வால்!


சென்னை: நடிகை சாக்‌ஷி அகர்வால் கோவாவில் திருமணம் முடித்திருக்கிறார்.

’காலா’, 'அரண்மனை3’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை சாக்‌ஷி அகர்வால். பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனிலும் இவர் போட்டியாளராகக் கலந்து கொண்டிருக்கிறார். உடற்பயிற்சி செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவரான இவர் அது தொடர்பான வீடியோக்களையும் தொடர்ச்சியாக தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

இப்போது தனது பால்யகால நண்பரான நவநீத் என்பவரை நேற்று கோவாவில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ திருமணம் முடித்திருக்கிறார். ’எங்கள் வாழ்வில் காதலும் மகிழ்ச்சியும் என்றும் இனி நிலைத்திருக்கும்’ என்ற கேப்ஷனோடு தனக்குத் திருமணம் ஆன விஷயத்தை அறிவித்திருக்கிறார் சாக்‌ஷி. ரசிகர்களும் திரையுலகினரும் இந்த ஜோடிக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

A post shared by Sakshi Agarwal (@iamsakshiagarwal)

x