பிரம்மாண்ட இயக்குநர்களுக்கு ஷங்கர்தான் இன்ஸ்பிரேஷன் - இயக்குநர் ராஜமெளலி பாராட்டு


சென்னை: இப்போதிருக்கும் பிரம்மாண்ட இயக்குநர்களுக்கெல்லாம் இயக்குநர் ஷங்கர்தான் இன்ஸ்பிரேஷன் என ராஜமெளலி பாராட்டியுள்ளார்.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் இந்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இயக்குநர் ராஜமெளலி, இயக்குநர் ஷங்கரைப் பாராட்டி பேசியிருக்கிறார்.

“இயக்குநர் ஷங்கர் மீது எங்களுக்கு மிகப்பெரிய மரியாதை உண்டு. அவரை தமிழ்- தெலுங்கு இயக்குநர் என்று வேறுபடுத்தி பார்த்ததில்லை. இப்போது, பிரம்மாண்ட படங்கள் எடுக்க நான் தான் இன்ஸ்பிரேஷன் என்று பலரும் சொல்கிறார்கள். ஆனால், எங்களுக்கெல்லாம் பெரிய இன்ஸ்பிரேஷன் ஷங்கர் சார்தான். பிரம்மாண்டம், வசூல் இவற்றின் ஒரிஜினல் கேங்க்ஸ்டர் ஷங்கர் சார்தான். அவர் பிரம்மாண்ட படங்களை இயக்கிக் கொண்டிருந்தபோது நாங்கள் கத்துக்குட்டிகளாக இருந்தோம். அப்படிப்பட்டவரின் இயக்கத்தின் என்னுடைய மகதீரா ராம்சரண் நடிப்பது பெருமையான விஷயம். படம் வெற்றி பெற வாழ்த்துகள்” என்றார்.

x