நடிகர்கள் சசிகுமார்- சிம்ரன் நடிப்பில் 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் படப்பிடிப்பு நிறைவு! 


நடிகர் சசிகுமார் கதையின் நாயகனாக நடித்து வரும் 'டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவீந் இயக்கத்தில் உருவாகி வரும் 'டூரிஸ்ட் ஃபேமிலி' திரைப்படத்தில் நடிகர்கள் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னராக இந்தப் படம் உருவாகி இருப்பதாகப் படக்குழு அறிவித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான காணொளி சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்திருக்கிறது. இதனை முன்னிட்டு படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டிருக்கிறார்கள். தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் தொடங்கி இருக்கிறது என படக் குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர். விரைவில் இப்படத்தின் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

x