சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘மதகஜராஜா’ படம் இந்த பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது.
இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில் நடிகர்கள் விஷால், அஞ்சலி, வரலட்சுமி உள்ளிட்டப் பலர் நடிப்பில் கடந்த் 2012ல் உருவான படம் ‘மதகஜராஜா’. பொருளாதாரப் பிரச்சினைகள் காரணமாக பல ஆண்டுகளாக இந்தப் படம் வெளியாவதில் சிக்கல் இருந்தது. அந்த பிரச்சினைகள் எல்லாம் சரியான நிலையில் படம் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறது.
நடிகர் அஜித்தின் ‘விடாமுயற்சி’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாவதாக இருந்து பின்னர் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. இதனையடுத்து ‘வணங்கான்’, ‘படைத்தலைவன்’, ‘தருணம்’, ‘கேம் சேஞ்சர்’, ‘நேசிப்பாயா’ உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகிறது. இந்த பொங்கல் ரேஸில் தற்போது ‘மதகஜராஜா’ படமும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.