சென்னை: 'மஞ்சுமெல் பாய்ஸ்' படத்தின் இயக்குநர் சிதம்பரம் மற்றும் ’ஆவேஷம்’ பட இயக்குநர் ஜித்து மாதவன் இருவரும் ஒரே படத்தில் கைக்கோத்துள்ளனர்.
கடந்த வருட தொடக்கத்தில் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்த மலையாளப் படங்களில் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ மற்றும் ‘ஆவேஷம்’ படங்களும் அடங்கும். எளிமையான கதைக்களத்தை அட்டகாசமான திரைக்கதையாக கொடுத்ததில் கவனம் ஈர்த்தார்கள் இந்தப் படத்தின் இயக்குநர்கள் சிதம்பரம் மற்றும் ஜித்து மாதவன். இப்போது இருவரும் புதிய படம் ஒன்றில் இணைகிறார்கள். இந்தப் படத்தை ’மஞ்சுமெல் பாய்ஸ்’ படத்தின் இயக்குநர் சிதம்பரம் இயக்க, ’ஆவேஷம்’ படத்தின் இயக்குநர் ஜித்து மாதவன் திரைக்கதை எழுதுகிறார். இந்தப் படத்திற்கு ஷைஜூ காலெத் ஒளிப்பதிவு செய்ய, சுஷின் ஷியாம் இசையமைக்கிறார்.
படம் குறித்து இயக்குநர் சிதம்பரம் மற்றும் ஜித்து மாதவன் பேசும்போது, "இந்தக் கதை எங்கள் மனதுக்கு மிகவும் நெருக்கமான ஒன்று. தலைசிறந்த குழுவுடன் இணைந்து, சிறப்பான படத்தை உருவாக்குவோம் என்ற நம்பிக்கை அதிகம் உள்ளது" என்றார்.