இயக்குநர் விஷ்ணு வரதனின் ‘நேசிப்பாயா’ பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!


இயக்குநர் விஷ்ணு வரதனின் ‘நேசிப்பாயா’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

’பில்லா’, ’அறிந்தும் அறியாமலும்’ உள்ளிட்டப் பல படங்களை இயக்கியவர் விஷ்ணு வரதன். இடையில் பாலிவுட்டிலும் படங்கள் இயக்கினார். இப்போது, தமிழில் ’நேசிப்பாயா’ படத்தை இயக்கி இருக்கிறார். நடிகர்கள் அதிதி ஷங்கர், ஆகாஷ் முரளி இதில் நடித்திருக்கின்றனர். மறைந்த நடிகர் முரளியின் இரண்டாவது மகன் ஆகாஷ் முரளி என்பது குறிப்பிடத்தக்கது.

காதலை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படத்தின் போஸ்டர்கள், பாடல்கள் இளைஞர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தது. இந்தப் படம் ஜனவரி 14ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஏற்கனவே பொங்கலுக்கு ‘கேம்சேஞ்சர்’, ‘வணங்கான்’ உள்ளிட்ட ஒன்பது படங்கள் வெளியாக இருக்கும் நிலையில் தற்போது ‘நேசிப்பாயா’ படமும் பொங்கல் ரேஸில் இணைந்துள்ளது.

x