தனக்கு எந்த அரசியல் பின்புலமும் கிடையாது என யூடியூபர் இர்ஃபான் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் சர்ச்சைகளின் மன்னனாக திகழ்ந்தார் யூடியூபர் இர்ஃபான். யூடியூபில் வெளிப்படையாக தனக்குப் பிறக்க இருக்கும் குழந்தையின் பாலினம் அறிவித்தது, குழந்தை பிறக்கும் போது இவர், அறுவை சிகிச்சை அறைக்குள் நுழைந்து, குழந்தையின் தொப்புள் கொடியை மருத்துவமனையில் வெட்டியது போன்ற விஷயங்களை புகைப்படங்களுடன் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார். இது குறித்து இர்ஃபானுக்கு தமிழக சுகாதரத்துறை எச்சரிக்கை விடுத்து நோட்டீஸ் அனுப்பினாலும் அவர் மீது இதுவரை சட்டபடியான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
ஆளுங்கட்சியான திமுகவுடன் இர்ஃபான் நெருக்கமாக இருப்பதே இதற்கு காரணம் என சொல்லப்பட்டது. இது குறித்து இர்ஃபான் வீடியோ வெளியிட்டு விளக்கம் கொடுத்திருக்கிறார். அதில், “உதயநிதி ஸ்டாலினுடன் நான் எடுத்த வீடியோ புரோமோஷனுக்கானது. அதனால், அவர்கள் என்னை எப்படி ஆதரிப்பார்கள்? அப்படி ஆதரவு இருந்தால் என்னைப் பற்றி பேசுபவர்கள் பேசாமலே இருந்திருக்கலாமே? என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு சட்டத்தின் அடிப்படையில் தான் நீதிமன்றம் செயல்படுகிறது” எனக் கூறியிருக்கிறார்.