விலகிய ‘விடாமுயற்சி’: பொங்கல் ரிலீஸுக்கு வரிசைக்கட்டும் படங்களின் லிஸ்ட்?!


சில தவிர்க்க முடியாத காரணங்கள் எனச் சொல்லி பொங்கல் ரேஸில் இருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் அஜித்தின் ‘விடாமுயற்சி’ படம் விலகியுள்ள நிலையில், அடுத்தடுத்து படங்கள் திடீரென பொங்கல் ரிலீஸுக்கு வரிசைக்கட்டி தயாராகி வருகின்றன.

பாலா இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் ‘வணங்கான்’ படமும், இயக்குநர் ஷங்கர்- நடிகர் ராம்சரணின் ‘கேம் சேஞ்சர்’ படம் பொங்கல் ரிலீஸை உறுதி செய்துள்ளன. அரசியல்வாதிக்கும் நேர்மையான அரசு அதிகாரிக்கும் இடையிலான முரண்பாடே ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம். இந்தப் படங்கள் தவிர்த்து இயக்குநர் சுசீந்திரனின் ‘2கே லவ் ஸ்டோரி’, கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம்ரவி, நித்யாமேனனின் ‘காதலிக்க நேரமில்லை’ ஆகிய படங்களும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

மறைந்த நடிகர் விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியன் கதாநாயகனாக நடித்திருக்கும் ‘படைத்தலைவன்’ படமும் பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் விஜயகாந்தை சிறப்புத் தோற்றத்தில் கொண்டு வந்திருக்கிறார்கள். மேலும், மிர்ச்சி சிவாவின் ‘சுமோ’, நானியின் ‘மெட்ராஸ்காரன்’, சிபிராஜின் ‘டென் ஹவர்ஸ்’, கிஷன் தாஸின் ‘தருணம்’ ஆகிய படங்களும் பொங்கல் ரிலீஸ் கோதாவில் இறங்க முடிவெடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

x