SK25: ’புறநானூறு’ படத்தின் டைட்டில் மாற்றமா? வெளியான புதுத்தகவல்!


நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சுதா கொங்கரா கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் டைட்டில் குறித்தானத் தகவல் வெளியாகி இருக்கிறது.

’சூரரைப் போற்று’ படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் சூர்யா- இயக்குநர் சுதா கொங்கரா கூட்டணியில் உருவாவதாக அறிவிக்கப்பட்ட படம் ‘புறநானூறு’. ஆனால், கதையில் நடிகர் சூர்யாவுக்கு உடன்பாடு இல்லை என்பதால் அவர் படத்தில் இருந்து விலகிவிட்டார் என சொல்லப்பட்டது. இது குறித்து சூர்யா, சுதா கொங்கரா இருவரும் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

இந்த நிலையில், சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 25ஆவது படத்தில் நடிக்கிறார். இவருடன் நடிகர்கள் ஜெயம்ரவி, அதர்வா முரளியும் நடிக்கின்றனர். இது சூர்யாவுக்காக உருவாக்கப்பட்ட ‘புறநானூறு’ படத்தின் கதை என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தப் படத்தின் கதையில் சிவகார்த்திகேயனுக்காக சுதா கொங்கரா எந்த மாற்றமும் செய்யவில்லை எனவும் சொல்லப்படுகிறது. ஆனால், படத்தின் டைட்டில் ‘புறநானூறு’ என்றில்லாமல் ‘1965’ என மாற்றியிருக்கிறார்கள். இது குறித்த தகவல்கள் விரைவில் உறுதிப்படுத்தப்படும் என எதிர்பார்க்கலாம்.

x