ஜெயம் ரவியின் ‘காதலிக்க நேரமில்லை’ படம் பொங்கலுக்கு ரிலீஸ்!


சென்னை: ஜெயம் ரவி நடித்துள்ள ‘காதலிக்க நேரமில்லை’ படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காதலிக்க நேரமில்லை’. ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

பொங்கல் வெளியீட்டில் இருந்து அஜித்தின் ‘விடாமுயற்சி’ தள்ளி வைக்கப்படுவதாக இன்று லைகா நிறுவனம் அறிவித்தது. இதனையடுத்து தற்போது ‘காதலிக்க நேரமில்லை’ படத்தை பொங்கல் பண்டிகைக்கு வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது. அதேபோல ‘படை தலைவன்’ படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியிடப்படும் என அறிவித்துள்ளனர்.

x