பொங்கலுக்கு வெளியாகிறது சண்முக பாண்டியனின் ‘படை தலைவன்’!


சென்னை: விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

‘சகாப்தம்’, ‘மதுரை வீரன்’ படங்களைத் தொடர்ந்து விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் படத்துக்கு ‘படை தலைவன்’ என தலைப்பு வைத்துள்ளனர். இதை, ‘வால்டர்’, ‘ரேக்ளா’ படங்களை இயக்கிய அன்பு இயக்குகிறார். விஜே கம்பைன்ஸ் சார்பில் ஜகநாதன் பரமசிவம் வழங்கும் இந்தப் படத்துக்கு எஸ்.ஆர்.சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். திரைக்கதை, வசனத்தை பார்த்திபன் தேசிங்கு எழுதியுள்ளார். கஸ்தூரி ராஜா, யாமினி சுந்தர், முனீஸ்காந்த் உட்பட பலர் நடிக்கின்றனர்.

இப்படத்துக்காக இளையராஜா எழுதி இசையமைத்திருந்த பாடல் ஏற்கனவே வெளியான நிலையில் சமீபத்தில் இதன் டிரைலரும் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இப்படம் வெளியீடு குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகாமல் இருந்தது. பொங்கல் வெளியீட்டில் அஜித்தின் ‘விடாமுயற்சி’ தள்ளி வைக்கப்படுவதாக இன்று லைகா நிறுவனம் அறிவித்தது. இதனால் ‘படை தலைவன்’ படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியிடப்படும் என அறிவித்துள்ளனர்.

x