புற்றுநோயில் இருந்து மீண்டேன்; நடிகர் சிவராஜ்குமார் வீடியோ வெளியிட்டு உருக்கம்!


பெங்களூரு: புற்றுநோயில் இருந்து தான் மீண்டுவிட்டதாக நடிகர் சிவராஜ்குமார் வீடியோ வெளியிட்டு பேசியுள்ளார்.

கன்னட நடிகர் சிவராஜ்குமாருக்கு சமீபத்தில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அதற்காக, அவர் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்றார். புற்றுநோய்க்கான சிகிச்சை முடிந்ததாக சொல்லப்பட்ட நிலையில் புற்றுநோயில் இருந்து தான் முழுமையாக குணமடைந்துவிட்டதாக சிவராஜ்குமார் தன் மனைவியுடன் உருக்கமான வீடியோ ஒன்றை சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

அதில், “சிகிச்சைக்காக அமெரிக்கா வரும்போது சற்று உணர்ச்சிவசப்பட்டு விட்டேன். எனக்கான மன தைரியத்தை நண்பர்கள், உறவினர்கள்தான் கொடுத்தார்கள். என் பக்கபலமாக என் மனைவி இருந்தார். அவர் இல்லாமல் நான் இல்லை. மகள் நிவேதிதா என் அருகில் இருந்து கவனித்துக் கொண்டார். எனக்கு சிறுநீர்ப்பை அகற்றப்பட்டு செயற்கையாக மாற்றப்பட்டது. ஜனவரி இறுதி வாரத்தில் இந்தியா திரும்பி விடுவேன். மார்ச் மாதத்தில் பணிக்கு திரும்புவேன். ரசிகர்களின் அன்புக்கும் ஆசீர்வாதத்திற்கும் நன்றி” என்று உருக்கமாகப் பேசியிருக்கிறார்.

அவர் மனைவி கீதாவும் சிவராஜ்குமார் புற்றுநோயில் இருந்து முழுமையாக மீண்டு விட்டதாக தெரிவித்திருக்கிறார்.

A post shared by DrShivaRajkumar (@nimmashivarajkumar)

x