இறுதிக்கட்டத்தை நெருங்கிய ‘7G ரெயின்போ காலனி2’: முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!


’7ஜி ரெயின்போ காலனி’ படத்தின் சீக்வல் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கிறது.

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான ‘7ஜி ரெயின்போ காலனி’ படத்தின் சீக்வல் அதன் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. செல்வராகவனே இரண்டாம் பாகத்தையும் இயக்கி வருகிறார்.

இந்த திரைப்படத்தில், நடிகர் ரவி கிருஷ்ணா கதாநாயகனாகவும், அனஸ்வரா ராஜன் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் நடிகர்கள் ஜெயராம், சுமன் ஷெட்டி மற்றும் சுதா ஆகியோரும் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தின் முதல் பாகத்திற்கு இசையமைத்த யுவன் ஷங்கர் ராஜாவே இரண்டாம் பாகத்திற்கும் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளர் ராம்ஜி படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இதன் முதல் பார்வை போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.

படம் பற்றி தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் கூறுகையில், "தமிழ் சினிமா ரசிகர்களின் இதயம் தொட்ட திரைப்படங்களில் ஒன்றாக ’7ஜி ரெயின்போ காலனி’ உள்ளது. முதல் பாகத்தில் இருந்த அதே மேஜிக்கை இந்த சீக்வலிலும் மறு உருவாக்கம் செய்திருக்கிறோம். இன்றைய தலைமுறை பார்வையாளர்களுக்கும் இந்த படம் பிடிக்கும் என நம்புகிறோம்” என்றார்.


x