சென்னை: புத்தாண்டு கொண்டாட நடிகர் அஜித் தனது குடும்பத்துடன் சிங்கப்பூர் கிளம்பி இருக்கிறார்.
இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் ‘விடாமுயற்சி’ திரைப்படம் அடுத்த வருடம் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில், வரும் புத்தாண்டு 2025ஐ கொண்டாடுவதற்காக தனது குடும்பத்துடன் அஜித் சிங்கப்பூர் கிளம்பியிருக்கிறார்.
விமான நிலையத்தில் ரசிகர்களுடன் அவர் எடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. நேற்று காலை, அஜித் அடுத்து நடித்து வரும் ’குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் சிங்கப்பூர் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.