சென்னை: வீட்டில் சித்ராவின் அறையிலேயே அவரது தந்தை தற்கொலை செய்து கொண்டதாக சித்ராவின் தாயார் கதறி அழுதிருக்கிறார்.
மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை காமராஜ் இன்று காலை திருவான்மியூரில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டில் சித்ரா தற்கொலை செய்து கொண்டதில் இருந்தே மன அழுத்தத்தில் காமராஜ் இருந்துள்ளதாக சித்ராவின் தாயார் கதறியழுதுள்ளார்.
இதுபற்றி அவர் பேசியிருப்பதாவது, “காலை 4 மணிக்கு கூட நன்றாக தான் இருந்தார். பின்னர் அவரது அறைக்குப் போய் பார்த்தபோது காணவில்லை. சித்ராவின் அறையிலேயே இவரும் தூக்கிட்டு இருக்கிறார். என் வீடே சுடுகாடாய் மாறிவிட்டது. இன்னும் எத்தனை பேரை அவன் கொல்லப் போகிறானோ எனத் தெரியவில்லை. சித்ராவின் வழக்கில் தீர்ப்பு வந்த நாளில் இருந்தே அவர் மனது உடைந்து போய்தான் இருந்தார். சரியாக சாப்பிடவில்லை” எனப் பேசியிருக்கிறார்.