தமிழக ஆளுநரை இன்று மதியம் தவெக தலைவர் விஜய் சந்தித்து பேச இருக்கிறார்.
சென்னை, அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வுக்கு பொதுமக்களும் பல கட்சிகளும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். தவெக தலைவர் விஜயும் இந்த சம்பவம் தனக்கு சொல்ல முடியாத துயரத்தை ஏற்படுத்தியிருப்பதாகக் கடிதம் வெளியிட்டிருக்கிறார். மேலும், திமுக அரசின் மீதும் அந்த கடிதத்தில் குற்றம் சுமத்தியிருக்கிறார்.
இந்த நிலையில், மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாகவும் பெண்கள் பாதுகாப்பு பற்றியும் இன்று மதியம் ஒரு மணியளவில் ராஜ்பவனில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து பேச இருக்கிறார். தவெக தலைவர் விஜய். தவெக கட்சி ஆரம்பித்து ஒரு வருடம் ஆக இருக்கும் நிலையில், ஆளுநரை சந்திப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.