விஜய் ஆண்டனி இசை நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பு; காரணம் என்ன?


சென்னை: இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி இசைக்கச்சேரிக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் எனப் பன்முகம் கொண்டவர் விஜய் ஆண்டனி. இவர் இசை நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கம். அந்த வகையில் ‘விஜய் ஆண்டனி 3.0’ என்ற பெயரில் சென்னை, மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இசை நிகழ்ச்சிகள் நடத்தத் திட்டமிட்டிருந்தது. புதுவருடத்தை விஜய் ஆண்டனியின் இசைக்கச்சேரியோடு வரவேற்க காத்திருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக இன்று நடைபெறவிருந்த இசைக்கச்சேரி தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

சில எதிர்பாராத காரணங்களாலும் சென்னையில் தற்போதுள்ள சூழ்நிலையாலும் அரசு அதிகாரிகள் வழங்கிய ஆலோசனை அடிப்படையில் நிகழ்வு வேறொரு தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். புதிய நிகழ்வு பிரம்மாண்டமாக நடக்கும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இசை நிகழ்ச்சி நடைபெறவிருந்த குடியிருப்பு பகுதியில் 20 ஆயிரம் பேர் கூடினால் பாதிப்புகள் ஏற்படும் எனவும் உரிய வசதிகள் செய்ய முடியாது எனவும் காவல்துறை சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

x