இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் மகன் சாமுவேல் நிக்கோலஸ் இசையமைத்து, பாடி நடித்துள்ள ‘ஐயையோ' பாடலை திங்க் மியூசிக் வெளியிட்டுள்ளது.
கோரஸ் பாடகராக இசைப் பயணத்தைத் தொடங்கிய சாமுவேல் நிக்கோலஸ், ‘தேவ்’ படத்தில் ஒரு பாடலைப் பாடியுள்ளார். தற்போது ‘ஐயையோ' மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி இருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “4 வயது முதல் இசை கற்று வருகிறேன். ‘ஐயையோ’ மூலம் இசை அமைப்பாளர் ஆகியிருக்கிறேன். இந்த ஆல்பத்தை சனா மரியம் இயக்கியுள்ளார். ஜாயித் தன்வீர் ஒளிப்பதிவு செய்துள்ளார். யூடியூப்பில் இந்தப் பாடல் வரவேற்பைப் பெற்றிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது” என்றார்.