நடிகர் ரெடின், தான் தந்தையாகவிருக்கும் செய்தியை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
’டாக்டர்’, ‘பீஸ்ட்’, 'ஜெயிலர்’ உள்ளிட்டப் பல்வேறு படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் ரெடின் கிங்க்ஸ்லி. இவருக்கும் சின்னத்திரை நடிகை, தொகுப்பாளர் சங்கீதாவுக்கும் கடந்த ஆண்டு திருமணம் முடிந்தது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. திருமணத்திற்குப் பிறகும் இருவரும் தங்களது பணியில் பிஸியாக இருந்தனர்.
இந்த நிலையில், கடந்த சில வாரங்களாகவே சங்கீதா கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வலம் வந்தது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் சங்கீதா தனது கணவர் ரெடினுடன் எடுத்திருக்கும் வீடியோ ஒன்றைப் பகிர்ந்து தான் கர்ப்பமாக இருப்பதை சொல்லியிருக்கிறார். இந்த ஜோடிக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.