சென்னை: அஜித் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ படத்தின் முதல் சிங்கிள் வரும் வெள்ளிக்கிழமை வெளியிடப்படுகிறது
இதுகுறித்து லைகா புரோடக்சன்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். ‘விடாமுயற்சி’ படத்தின் முதல் சிங்கிள் ‘Sawadeeka' வரும் வெள்ளிக்கிழமை 27 ஆம் தேதி மதியம் 1 மணிக்கு வெளியிடப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள படம், ‘விடாமுயற்சி’. லைகா தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார். த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உட்பட பலர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்றது. இப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Wishing everyone a Merry Christmas