‘த்ரிஷ்யம் 3’ கண்டிப்பாக உருவாகும்: உறுதி செய்​தார் மோகன்​லால்


மோகன்​லால், மீனா நடிப்​பில் கடந்த 2013-ம் ஆண்டு வெளி​யாகி வரவேற்​பைப் பெற்ற மலையாளப் படம் ‘த்ரிஷ்​யம்’. ஜீத்து ஜோசப் இயக்கிய இந்தப் படம் தமிழில், கமல்​ஹாசன், கவுதமி நடிப்​பில் ‘பாபநாசம்’ என்ற பெயரில் ரீமேக் செய்​யப்​பட்​டது. தமிழிலும் வரவேற்​பைப் பெற்ற இந்தப் படம் தெலுங்கு, கன்னடம், இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்​யப்​பட்​டது.

பின்னர் இதன் இரண்​டாம் பாகமும் வெளி​யாகி வரவேற்​பைப் பெற்​றது. இதைத் தொடர்ந்து இதன் மூன்​றாம் பாகத்தை உருவாக்க இருப்​பதாக சில மாதங்​களுக்கு முன் இயக்​குநர் ஜீத்து ஜோசப் கூறி​யிருந்​தார். இந்நிலை​யில் நடிகர் மோகன்​லாலும் அதை உறுதிப்​படுத்​தி​யுள்​ளார்.

அவர் அளித்த பேட்டி ஒன்றில், “த்ரிஷ்யம் படத்​துக்​குப் பிறகு நாடு முழு​வதும் மலையாளப் படங்​களைப் பார்க்கத் தொடங்​கினர். மலையாள சினி​மாவை பான் இந்தியா அளவில் கொண்​டு சென்​றதுக்கு ‘த்ரிஷ்யம்’ படத்​துக்கு முக்கிய பங்கு உண்டு. தற்போது அந்தப் படத்​தின் மூன்​றாம் பாகத்​தைக் கொண்டு வரும் முயற்​சி​யில் இருக்​கிறோம். கண்டிப்பாக உருவாகும்” என்றார்.

x