பிரபல இயக்குநர் ஷியாம் பெனகல் காலமானார்


பிரபல பாலிவுட் இயக்குநர் ஷியாம் பெனகல் நேற்று மும்பையில் காலமானார். அவருக்கு வயது 90. சிறுநீரக தொற்று பாதிப்பு காரணமாக மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 6.30 மணியளவில் அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரபல நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

1970-களில் திரைப்படங்கள் இயக்கத் தொடங்கினார். இந்தியில் வெளியான அங்குர் (1973), நிஷாந்த் (1975), மந்தன் (1976), பூமிகா (1977), மம்மோ (1994), சர்தாரி பேகம் (1996), ஜுபைதா (2001) உள்ளிட்ட படங்கள் இவருக்கு பெரும் புகழைப் பெற்றுத் தந்தன. பத்மஸ்ரீ, பத்மபூஷண், தாதா சாகேப் பால்கே உள்ளிட்ட விருதுகளைப் பெற்றவர். 18 தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். வங்கதேசத்தின் முதல் அதிபரான முஜிபுர் ரஹ்மான் வாழ்க்கை கதையை ‘முஜிப்: த மேக்கிங் ஆப் எ நேஷன்’ என்ற பெயரில் இவர் இயக்கிய படம் 2023-ல் வெளியாகி கவனத்தை ஈர்த்தது.

x