மீண்டும் ரஜினிகாந்துடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன்: மனம் திறந்த தேவா!


மதுரை: மீண்டும் ரஜினிகாந்துடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன், அதற்காக காத்திருக்கிறேன் என்று இசையமைப்பாளர் தேவா தெரிவித்துள்ளார்

மதுரை தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களிடம் பேசிய பிரபல இசையமைப்பாளர் தேவா, “ மதுரை இசை நிகழ்ச்சியில் பாடகர் மனோ, அனுராதா ஸ்ரீராம், அஜய் கிருஷ்ணா, சபேஸ், முரளி, ஸ்ரீ காந்த் தேவா உள்ளிட்ட சுமார் 60 இசைக்கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.
காலம் கடந்து எனது இசை இருப்பதற்கு மிகப்பெரிய பாக்கியம் செய்திருக்கின்றேன். எனக்கு அனிருத் இசை ரொம்ப பிடிக்கும். எனக்கு நடிக்க நிறைய படங்களுக்கு வாய்ப்பு கிடைத்தாலும் அதில் விருப்பமில்லை.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எவ்விதமான அவமதிப்பும் நடக்கவில்லை. இதை அவருமே கூறியிருக்கிறார். தற்போதைய இளம் இசை அமைப்பாளர்கள் நன்றாக இசையமைக்கின்றனர். எனது பாடல் 35 ஆண்டுக்கு பிறகு தற்போதும் திரைப்படங்களில் பயன்படுத்தப்படுவது எனக்கு கிடைத்த பாக்கியம். மீண்டும் ரஜினிகாந்துடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன். அதற்காக காத்திருக்கிறேன்” இவ்வாறு அவர் கூறினார். தேவாவின் இசை நிகழ்ச்சி ஜனவரி 18-ஆம் தேதி மதுரை யா.ஒத்தக்கடை அருகிலுள்ள மைதானத்தில் நடக்கிறது.

x