ஜெயம் ரவி விவாகரத்து வழக்கு: மனம் விட்டு பேச நீதிமன்றம் அறிவுரை!


சென்னை: நடிகர் ஜெயம் ரவியின் விவாகரத்து வழக்கில் ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தியை மனம் விட்டு பேச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் ஜெயம் ரவி தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி பொதுவெளியில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். ஆனால், இது தன்னை கேட்காமல் எடுக்கப்பட்ட முடிவு என்றும் ஜெயம் ரவியுடன் சேர்ந்து வாழவே விரும்புவதாகவும் ஆர்த்தி பதில் அறிக்கை விடுத்தார். இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளானது.

விவாகரத்து கோரி ஜெயம் ரவி தாக்கல் செய்த வழக்கு முன்பு குடும்ப நல நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தபோதே, இருவருக்குமிடையிலான சமரச பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை. இப்போது மீண்டும் குடும்பநல நீதிமன்றத்தில் சமரச பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டிருக்கின்றனர். இருவரும் மனம் விட்டு பேசவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால், ஒரு மணி நேரத்திற்கும் மேலான சமரச பேச்சுவார்த்தையில் இப்போதும் உடன்பாடு எட்டாத நிலையில் இந்த வழக்கு விசாரணையை ஜனவரி 18 ஆம் தேதிக்கு நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

x