நடனத்திற்கான ஓடிடி தளம்: சுவிட்சர்லாந்தில் அறிமுகப்படுத்திய பிரபல நடன இயக்குநர்!


சென்னை: பிரபல நடன இயக்குநர் ஷெரிப் நடனத்திற்கான ஓடிடி தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.

’பேட்ட’, ‘ஜகமே தந்திரம்’, ‘டிக்கிலோனா’ உள்ளிட்டப் பல படங்களுக்கு நடனம் அமைத்தவர் ஷெரிப். இவர் நடனத்திற்கென பிரத்யேக ஓடிடி தளமான ஜூபாப் ஹோமை கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தியாவில் அறிமுகப்படுத்தினார். இதனை அடுத்து சுவிட்சர்லாந்திலும் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுபற்றி ஷெரிப் பேசியதாவது, “வாய்ப்புகளுக்கான களம் இப்போது விரிவாகிக் கொண்டே போகிறது. படங்களைப் போலவே நடனத்திற்கும் ஓடிடி தேவை இருக்கிறது என்பதை புரிந்து கொண்டோம். நடன ஆர்வலர்கள் இணைந்து ஆக்கபூர்வமாக செயல்பட சிறந்த தளமாக இது இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கும் தேவையான எளிய நடனங்களும் இங்கு இருக்கும். விரைவில் பல நாடுகளிலும் அறிமுகப்படுத்த திட்டம் வைத்திருக்கிறோம்” என்றார்.

x