சென்னை: பிக்பாஸ் வீட்டில் இருந்து குறைந்த வாக்குகள் பெற்று இந்த வாரம் வெளியேறப் போவது யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதில் கடந்த வாரம் டபுள் எலிமினேஷனில் சத்யாவும் தர்ஷிகாவும் வெளியேறி இருந்தார்கள். போட்டி முடிய இன்னும் ஐந்து வாரங்களே இருக்கும் நிலையில் இந்த வாரமும் டபுள் எலிமினேஷன் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. ஆனால், அடுத்த வாரம் பணப்பெட்டியுடன் போட்டியாளர் ஒருவர் வெளியேறலாம் என்பதால் ஒருவர் மட்டுமே இந்த வாரம் வெளியேற்றப்பட இருக்கிறார்.
அந்த வகையில், குறைந்த வாக்குகள் பெற்று ரஞ்சித் மற்றும் ரயான் இருவரும் பின்தங்கியுள்ளனர். ரயான் வைல்ட் கார்டு எண்ட்ரியாக உள்ளே நுழைந்தும் ஆட்டத்தில் சுவாரஸ்யம் கூட்டாததால் இவர் டேஞ்சர் ஜோனில் இருக்கிறார். கடந்த வாரத்தில் கேப்டன் பதவி கிடைத்தும் செயலற்ற கேப்டன் என்ற அதிருப்தியை சக போட்டியாளர்களிடம் இருந்து பெற்றார் ரஞ்சித். மேலும், பிக்பாஸ் வீட்டிற்கு வந்து 70 நாட்கள் கடந்தும் ஆட்டத்தில் சுவாரஸ்யம் கூட்டாமல் அமைதியாகவே அன்பு மட்டுமே தருவதால் இந்த வாரம் ரஞ்சித் வெளியேற்றப்படலாம் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது.