சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா உட்பட பலர் நடித்துள்ள படம், ‘புஷ்பா 2’. கடந்த 5-ம் தேதி வெளியான இந்தப் படம் தெலுங்கு, தமிழ், இந்தி உட்பட 5 மொழிகளில் வெளியானது. படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வந்தாலும் வசூலில் சாதனை படைத்து வருகிறது. வெளியான 15 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.1508 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இதன் மூலம் இவ்வளவு கோடியை வேகமாகக் கடந்த இந்திய படமாக ‘புஷ்பா 2’ மாறியுள்ளது.
ரூ.1000 கோடி வசூலை எட்ட ‘பாகுபலி 2’ படத்துக்கு 10 லிருந்து 11 நாட்கள் ஆனது. ஆனால், ‘புஷ்பா 2’ வெறும் 6 நாட்களில் அந்த தொகையைக் கடந்தது. இந்தப் படம் இந்தியாவில் மட்டும் ரூ. 983.9 கோடியை வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே சினிமா டிக்கெட்களை ஆன்லைனில் விற்கும் புக் மை ஷோ நிறுவனம், இந்த வருடம் அதிகமானோர் பார்த்த திரைப்படமாக ‘புஷ்பா 2’-வை குறிப்பிட்டுள்ளது. புக் மை ஷோவில், தனி நபர்களுக்கு மட்டும் 10.8 லட்சம் ‘புஷ்பா 2’ டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.