ஞானபீட விருது பெற்ற மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் (91). பாதிராவும் பகல்வெளிச்சமும், நாலுகெட்டு உட்பட பல
நாவல்களையும் ஏராளமான சிறுகதைகளையும் எழுதியுள்ளார். மம்மூட்டிநடித்த ‘ஒரு வடக்கன் வீரக்கதா’, கமல்ஹாசன் நடித்த ‘கன்னியாகுமரி’ உட்பட 54 திரைப்படங்களுக்குத் திரைக்கதை எழுதியுள்ளார். நிர்மால்யம், பந்தனம், மஞ்சு கடவு உட்பட சில படங்களை இயக்கியுள்ளார். இவரின் 9 சிறுகதைகளைக் கொண்ட ‘மனோரதங்கள்’ என்ற ஆந்தாலஜி படம், ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியானது. இவருக்கு சில நாட்களுக்கு முன் மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து கோழிக்கோடு பேபி மெமோரியல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவர் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.