நடிகர் சிவராஜ்குமாருக்கு அமெரிக்காவில் சிகிச்சை


பிரபல கன்னட ஹீரோவான சிவ ராஜ்குமார், தமிழில் ஜெயிலர், கேப்டன் மில்லர் படங்களில் நடித்துள்ளார். இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதன் சிகிச்சைக்காக அவர் அமெரிக்கா சென்றுள்ளார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘புற்றுநோய் என்று சொன்னதும் பதற்றமாகத்தான் இருந்தது. பரிசோதனையில் பயப்படும் அளவுக்கு எதுவும் இல்லை என்று மருத்துவர் சொல்லி இருக்கிறார்.

புளோரிடாவில் உள்ள மியாமி கேன்சர் இன்ஸ்டிடியூட்டில் டிச. 24 ம் தேதி எனக்கு அறுவை சிகிச்சை நடக்க இருக்கிறது. அமெரிக்காவில் மிகவும் பிரபலமான புற்றுநோயியல் நிபுணர் மருத்துவர் முருகேஷ் என் மனோகர் எனக்கு சிகிச்சை அளிக்க இருக்கிறார். என்னை நினைத்துக் கவலைப்பட வேண்டாம். சுமார் ஒரு மாதம் அமெரிக்காவில் தங்கி அனைத்து சிகிச்சைகளையும் முடித்துவிட்டு ஜன. 26-ம் தேதி இந்தியா திரும்ப இருக்கிறேன்’’ என்றார்.

x