பிக்பாஸ்8: இந்த சீசனில் பணப்பெட்டியுடன் வெளியேறப் போவது யார்?


சென்னை: பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் இந்த சீசனில் பணப்பெட்டியுடன் வெளியேறப் போவது யார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. நிகழ்ச்சி எழுபது நாட்களைக் கடந்திருக்கும் நிலையில் போட்டியாளர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது. இன்னும் ஐந்து வாரங்களில் நிகழ்ச்சி முடிவடைய இருக்கும் நிலையில் பணப்பெட்டி இன்னும் சில வாரங்களில் வர இருக்கிறது. கடந்த சீசனில் நடிகை பூர்ணிமா ரூ. 16 லட்சம் பணப்பெட்டியோடு வெளியேறினார். தமிழ் சீசனில் இதுவே அதிகபட்ச தொகையாகும்.

அந்த வகையில், இந்த சீசனில் கானா பாடகர் ஜெஃப்ரி பணப்பெட்டி எப்போதும் வரும் என சக போட்டியாளரான ரஞ்சித்திடம் கேட்டிருந்தார். போட்டியாளர்கள் எல்லோரிடமும் அன்பு காட்டி அவர்கள் தனக்கு காட்டும் சலுகை, ஆட்டத்தை பாதிப்பதாக உணர்ந்திருக்கும் ஜெஃப்ரி பணப்பெட்டியுடன் வெளியேறும் முடிவில் இருப்பதாகத் தெரிகிறது. இவரைப் போலவே, போட்டியாளர் ராணவும் பணப்பெட்டி எடுக்கும் எண்ணத்தில் இருக்கிறார். இவர்கள் இருவரில் யார் பணப்பெட்டி எடுப்பார்கள் அல்லது வேறு போட்டியாளர் முந்திக் கொள்கிறாரா என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரிய வரும்.

x