இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களுக்கு இசை அமைத்து வருகிறார். சமீபத்தில் வெளியான பான் இந்தியா படமான ‘கல்கி 2898 ஏடி’-க்கும் அவர் இசை அமைத்திருந்தார். தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம், ‘கல்கி 2’ உட்பட சில படங்களுக்கு இசை அமைத்து வருகிறார்.
இந்நிலையில் அவர் இந்தியில் அறிமுகமாகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் ‘சிக்கந்தர்’ படத்தின் படப்பிடிப்பு இப்போது நடந்து வருகிறது. இதில் ராஷ்மிகா மந்தனா, சத்யராஜ் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் பாடல்களுக்கு பிரீத்தம் இசை அமைக்கிறார். பின்னணி இசையை சந்தோஷ் நாராயணன் அமைக்க இருப்பதாகவும் இதன் மூலம் அவர் இந்திக்கு செல்வதாகவும் கூறப்படுகிறது.