இறுதிக்கட்டத்தில் ‘விடாமுயற்சி’ திரைப்படம்: அஜித் - த்ரிஷா புகைப்படங்கள் வைரல்!


சென்னை: நடிகர் அஜித்தின் ‘விடாமுயற்சி’ திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இது தொடர்பான ஸ்டில்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளன.

மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர்கள் அஜித், த்ரிஷா உள்ளிட்டப் பலர் நடித்து வரும் ‘விடாமுயற்சி’ திரைப்படம். இதன் பெரும்பகுதி அஜர்பைஜான் பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடம் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இறுதிக்கட்ட படப்பிடிப்பை ‘விடாமுயற்சி’ நெருங்கியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

விறுவிறுப்பான ஆக்‌ஷன் காட்சிகளைக் கொண்ட இந்தப் படத்தில் அஜித்துடன் இணைந்து அர்ஜூனும் நடிக்கிறார். ‘மங்காத்தா’ படத்திற்குப் பிறகு இவர்கள் இருவரும் இணைந்து நடிப்பது குறிப்பிடத்தக்கது.

x