சிவகார்த்திகேயனின் புதிய பட டீசர் எப்போது ரிலீஸ் தெரியுமா?


சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் புது பட டீசர் எப்போது ரிலீஸ் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

’அமரன்’ பட வெற்றிக்குப் பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் தனது 23 ஆவது படமாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் நடிகை ருக்மிணி கதாநாயகியாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதற்கிடையில் சல்மான் கானின் புதிய படமான ‘சிக்கந்தர்’ படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனால், சிவகார்த்திகேயனின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இன்னும் சில மாதங்கள் கழித்து முடிக்கவும் படத்தை அடுத்த வருடம் ஜூன் மாதம் வெளியிடவும் படக்குழு திட்டமிட்டு வருகிறது.

இதற்கிடையில், சிவகார்த்திகேயனின் 23 ஆவது படத்தின் டைட்டில் டீசர் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டிருக்கிறதாம். இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கலாம்.

x