நடிகர் விக்ரம் படத்தில் நடந்த ட்விஸ்ட் - பாடகர் ரஞ்சித் பேட்டி!


சென்னை: நடிகர் விக்ரம் படத்தில் நடந்த ட்விஸ்ட் குறித்தான சுவாரஸ்ய தகவலை பாடகர் ரஞ்சித் பகிர்ந்திருக்கிறார்.

’விளையாடு மங்காத்தா’, ‘ஜிங்குணமணி’ உள்ளிட்டப் பல ஹிட் பாடல்களைப் பாடியர் பாடகர் ரஞ்சித். இந்து தமிழ் திசைக்காக இவர் அளித்த நேர்காணலில் நடிகர் விக்ரமின் ‘அருள்’ படத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவம் குறித்து பகிர்ந்திருக்கிறார். “அந்தப் படத்தில் ‘சூடாமணி’ என்ற பாடலை பாடியிருப்பேன். காதல் பாடலான அதை திரையரங்கில் பார்க்க என் நண்பர்கள், குடும்பத்துடன் சென்றிருந்தே. ஹீரோ vs வில்லன் சண்டை என கிளைமாக்ஸை படம் நெருங்கி விட்டது. ஆனால், நான் பாடிய அந்தப் பாடல் மட்டும் காணோம்.

சரி படத்தில் இருந்து தூக்கி விட்டார்களோ என்று வருத்தத்துடன் இருந்தேன். அப்போதும் படம் முடியும் சமயத்தில் திடீரென அந்தப் பாடல் வந்தது. எனக்கு பாடல் படத்தில் இடம்பெற்றிருக்கிறதே என மகிழ்ச்சியாவதா அல்லது சம்பந்தமே இல்லாத இடத்தில் படத்தில் இடம்பெற்றிருக்கிறதே என கவலைப்படுவதா எனத் தெரியாத ஒரு அனுபவமாக அது அமைந்தது” என்றார்.

x