தெலங்கானா மாவட்டத்தில் நேற்று நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்ட நிலையில் இடைக்கால ஜாமீன் கிடைப்பதில் தாமதமானதால் இரவு முழுவதும் சிறையில் இருந்த நிலையில் இன்று காலை சிறையிலிருந்து வெளியே வந்தார்.
முன்னதாக புஷ்பா 2 திரைப்பட சிறப்புக்காட்சியைப் பார்க்க சென்றிருந்த ரசிகர்களுக்கிடையே நடிகர் அல்லு அர்ஜுனைக் காண தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் கூட்ட நெரிசலில் சிக்கி இளம்பெண் ஒருவர் பலியானார். அவரது மகன் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவித்திருந்தார் நடிகர் அல்லு அர்ஜுன். இந்த வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுன் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில், தெலங்கானா உயா்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது.
ஆனால் இதற்கான ஆவணங்கள் முழுமையாக கிடைக்காத நிலையில், நேற்று இரவு முழுவதும் சிறையிலேயே கழித்த நடிகர் அல்லு அர்ஜுன் இன்று காலை சிறையிலிருந்து வெளியே வந்தார்.
இந்த வழக்கில் திரையரங்க உரிமையாளா், மேலாளா், ஊழியா் என 3 பேரை காவல் துறையினா் ஏற்கெனவே கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.