நடிகர் அல்லு அர்ஜூன் சிக்கடப்பள்ளி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நடிகர் அல்லு அர்ஜூன் மற்றும் ராஷ்மிகா மந்தானா நடிப்பில் கடந்த 5 ஆம் தேதி ‘புஷ்பா2’ படம் வெளியானது. படம் வெளியான முதல் நாள் ஹைதராபாத் சந்தியா திரையரங்கில் ப்ரீமியர் ஷோ திரையிடப்பட்டது. ரசிகர்களுடன் படம் பார்க்க நடிகர் அல்லு அர்ஜூன் திரையரங்கிற்கு வந்திருந்தார். இதனால், ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி 35 வயதான ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். அவரது மகனும் மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளார்.
இதனால், அல்லு அர்ஜூன் மற்றும் சந்தியா திரையரங்க உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ரேவதியின் குடும்பத்திற்கு வருத்தம் தெரிவித்தது மட்டுமல்லாது, ரூ. 25 லட்சம் நிதியுதவியும் அளித்தார். மேலும், தன் மீதுள்ள வழக்கை நீக்கும்படியும் தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். ஏற்கனவே, திரையரங்க உரிமையாளர் மற்றும் மேலாளர் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று சிக்கடப்பள்ளி காவல்துறையினரால் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Ammov Bhaai arrest ah #Alluarjun#Alluarjunarrest pic.twitter.com/wz0ScWnXol
— CULT MAMA ᴿᴬᴾᴼ²² 'ᴿᴱᴮᴱᴸᵂᴼᴼᴰ' (@kalki2024BC) December 13, 2024