நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம்: தனி விமானத்தில் பறந்த விஜய், த்ரிஷா!


நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு நடிகர்கள் விஜய் மற்றும் த்ரிஷா இருவரும் தனி விமானத்தில் பறந்திருக்கின்றனர்.

நடிகை கீர்த்தி சுரேஷ்- ஆண்டனி திருமணம் நேற்று கோவாவில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் விஜய், த்ரிஷா, நானி உள்ளிட்டத் திரைப்பிரபலங்களும் கீர்த்தி சுரேஷின் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் கலந்து கொண்டனர்.

நடிகை கீர்த்தியின் திருமணத்தில் விஜய் கலந்து கொண்ட புகைப்படமும் இணையத்தில் வைரலானது. திருமணம் முடித்த பின்பு த்ரிஷா மற்றும் விஜய் இருவரும் தனி விமானத்தில் கோவாவில் இருந்து கிளம்பி இருக்கின்றனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

x