சென்னை: நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷலாக ‘கூலி’ படக்குழு வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் இன்று 75ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். திரையுலகினரும் ரசிகர்களும் அவர்களுக்கு வாழ்த்து சொல்லி வருகின்றனர். ‘வேட்டையன்’ படத்தை அடுத்து ரஜினி தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார். ரஜினியின் பிறந்தநாள் ஸ்பெஷலாக இந்தப் படத்தில் இருந்து இன்று ’சிக்கிட்டு வைப்’ என்ற பாடல் வெளியாகி உள்ளது.
நடிகர், இயக்குநர் டி. ராஜேந்திரனின் புகழ் பெற்ற தாளத்துடன், அறிவு வரிகளில் டி.ஆர்., அறிவு, அனிருத் குரலில் இந்தப் பாடல் வெளியாகியுள்ளது. ரஜினியின் நடன அசைவுகள் மாஸாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். முன்பு ‘லியோ’ படத்தில் ‘நான் ரெடிதான்’ பாடல் போலவே இந்தப் பாடலும் இருப்பதாகவும் சொல்லி வருகின்றனர் இணையவாசிகள்.