சென்னை: இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு லண்டன் டிரினிட்டி லாபன் இசைப்பள்ளியின் கெளரவத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
’ரோஜா’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ரஹ்மான். 30 ஆண்டுகளுக்கும் மேலாக இசைத்துறையில் தனது இசையால் பலரது இதயங்களை வென்றவர். ஆஸ்கர் உள்ளிட்ட பல உயரிய விருதுகளையும் வென்றுள்ளார். இவரது, இந்த பெருமைக்கு மகுடம் வைக்கும் வகையில் லண்டன் டிரினிட்டி லாபன் இசைப்பள்ளியின் கெளரவத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ’இசை, நடனம் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றை முழுமையாக ஏற்றுக்கொள்வதற்கான யுகத்தில் வாழ்கிறோம்’ என அங்கு பேசியிருக்கிறார் ரஹ்மான்.
கடந்த 2008 ஆம் ஆண்டு முதலே லண்டன் டிரினிட்டி லாபன் இசைப்பள்ளியுடன் நல்லுறவில் ரஹ்மான் இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள். கெளரவத் தலைவராக ரஹ்மான் பொறுப்பேற்றிருப்பது தங்கள் பெருமிதம் என்றும் கூறியிருக்கிறார்கள்.