நடிகை கீர்த்தி சுரேஷ் கோவாவில் திருமணம் முடித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை கீர்த்தி சுரேஷ் தனது 15 வருட கால நண்பரான ஆண்டனியை திருமணம் செய்ய இருப்பதாக அறிவித்தார். இதற்கு முன்பு இருவரும் காதலிக்கிறார்கள் என முன்பே செய்தி வந்தாலும் கீர்த்தி அதனை உறுதி செய்யாமல் இருந்தார். இப்போது இருவீட்டார் சம்மதத்துடன் கோவாவில் இன்று திருமணம் முடித்திருக்கின்றனர்.
ஆண்டனி, கீர்த்தி சுரேஷ் பெயரை இணைத்து ’நைக்கின் காதல்’ என்ற ஹேஷ்டேக்கையும் குறிப்பிட்டிருக்கிறார். நடிகர் விஜயும் கீர்த்தி சுரேஷின் திருமணத்தில் கலந்து கொண்டார் என்ற செய்தியும் வெளியாகியுள்ளது. மணமக்களுக்கு திரையுலகினரும் ரசிகர்களும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.