சட்டப்படி நடவடிக்கை: பொங்கி எழுந்த நடிகை சாய்பல்லவி!


அடிப்படை ஆதாரமற்று தன்னைப் பற்றி வரும் வதந்திகளுக்கு தக்க பதிலடி கொடுப்பேன் என நடிகை சாய்பல்லவி தெரிவித்துள்ளார்.

’அமரன்’ படத்தை அடுத்து நடிகை சாய்பல்லவி தற்போது பாலிவுட்டில் ரன்பீர் கபூருடன் ராமாயணம் படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சீதையாக இவர் நடிப்பதால் சைவ உணவுகளை சாப்பிடாமல் அசைவம் மட்டுமே சாப்பிட்டு வருவதாகவும் இதற்காக படப்பிடிப்புத் தளத்தில் கொடுக்கும் உணவுகளை எடுத்துக் கொள்ளாமல் தான் செல்லும் இடங்களுக்கெல்லாம் சைவ உணவு சமைத்துத் தரும் சமையற்காரரையும் உடன் அழைத்துச் செல்வதாகவும் பத்திரிக்கை ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு சாய்பல்லவி பதிலடி கொடுத்திருக்கிறார். இது குறித்து பதிவிட்டுள்ள நடிகை சாய் பல்லவி, ’என்னைப் பற்றி அடிப்படை ஆதாரமற்ற செய்திகள் ஒவ்வொரு முறை வரும்போது நான் அமைதியாக இருந்தேன். நான் என்ன செய்கிறேன் என்பது கடவுளுக்குத் தெரியும். நான் அமைதியாக இருப்பதால்தான் எனது சினிமா வாழ்வின் மகிழ்ச்சியான தருணங்களில் எல்லாம் இது போன்ற செய்திகள் தொடர்ந்து வருகிறது.

இனியும் அமைதியாக இருக்க மாட்டேன். இப்படி செய்தி பரப்பும் நிறுவனங்கள் அல்லது நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்” எனக் கூறியிருக்கிறார்.

x