நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளுக்கு விஜய் வாழ்த்து


நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளுக்கு நடிகர் விஜய் தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார்.

நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 75ஆவது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். திரையுலகினரும் ரசிகர்களும் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர், தவெக தலைவர் விஜய் தனது சமூகவலைதளப் பக்கத்தில், ‘பேரன்பிற்கும் மரியாதைக்கும் உரிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

சினிமாவில் நடிகராக வேண்டும் என்ற ஆசை நடிகர் ரஜினிகாந்தைப் பார்த்தே வந்ததாகவும் அவர் தான் தனக்கு ரோல் மாடல் என்றும் பல பேட்டிகளில் வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறார் விஜய். தனது ஆதர்ச நாயகனுக்கு அவர் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளதை ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.

x